ஆடி மாத பிறப்பு மற்றும் விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்.

கடலில் புனித நீராடி 4மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் திருவிழா நாட்களைத் தவிர நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில் தமிழ் மாதத்தில் சிறப்பு வாய்ந்த மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது.
இந்த நிலையில் ஆடி மாத பிறப்பு மற்றும் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையை என்பதால், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி 4 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருச்செந்தூர் கோவிலில் நூறு ரூபாய் கட்டணம் தரிசனம் பொது தரிசனம் என இரண்டு தரிசனம் வரிசை மட்டுமே உள்ள நிலையில் முதியவர்களுக்கு சிறப்பு தரிசன வழியும் கடந்த வாரம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. முதியவர்கள் தங்களின் வயதை உறுதிப்படுத்தும் வகையில் ஆதார் அட்டை அல்லது வாகன ஓட்டுனர் உரிமம் காண்பித்து தரிசனம் செய்து கொள்ள ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.