BREAKING NEWS

ஆடுதுறை திருநீலக்குடி சாலையின் நடுவில் உல்லாச நடனம் ஆடிய ஜோடி பாம்புகள் இருசக்கர வாகன ஓட்டிகள் இருபுறமும் காத்து நின்றனர்

ஆடுதுறை திருநீலக்குடி சாலையின் நடுவில் உல்லாச நடனம் ஆடிய ஜோடி பாம்புகள் இருசக்கர வாகன ஓட்டிகள் இருபுறமும் காத்து நின்றனர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள ஆடுதுறை திருநீலக்குடி சாலையில் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் நுழைவாயில் அமைந்துள்ளது.

 

 

இதன் அருகே இரவு 7.30 மணி அளவில் சாலையின் நடுவில் சுமார் 5 அடி நீளம் உள்ள இரண்டு பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டு உல்லாச நடனம் புரிந்தபடி இருந்தன அந்த வழியாக வந்த இருசக்கர வாகனங்களின் லைட் வெளிச்சத்தில் பின்னிப்பிணைந்தவாறு பாம்புகளை பார்த்ததும் வாகன ஓட்டிகள் இருபுறமும் அச்சத்துடன் காத்து நின்றனர்.

 

 

நீண்ட நேரம் வாகன ஓட்டிகள் இருபுறமும் காத்து நின்றாலும் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் சாலையில் பாம்புகள் விளையாடிக் கொண்டிருந்ததால் பொதுமக்கள் அச்சத்துடன் நின்றனர் நீண்ட நேரத்திற்கு பிறகு அருகில் வயல்வெளி பகுதிக்குள் சென்றனர் அதன் பின்னர் வாகன ஓட்டிகள் ஆடுதுறை திருநீலக்குடி சாலையில் செல்ல துவங்கினர்.

 

CATEGORIES
TAGS