ஆண்டிபட்டி தனியார் மண்டபத்தில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி பிரமாண்டமாக நடைபெற்றது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தனியார் மண்டபத்தில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி பிரமாண்டமாக நடைபெற்றது. ஆண்டிபட்டி உமா நாராயணன் பதிப்பகத்தின் பத்தாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் சுப்ரீம் செஸ் அகாடமி ஆகியவை இணைந்து ஆண்டிபட்டியில் மாவட்ட அளவிலான மாணவ ,மாணவிகளுக்கான சதுரங்க போட்டிகளை நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் ,கோப்பை மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
மேலும் தேனி மாவட்ட அளவில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்கு பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது காலையில் தொடங்கிய சதுரங்க போட்டிக்கு ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் பொன் சந்திரகலா தலைமை தாங்கினார்.
போட்டியினை உமா நாராயணன் பதிப்பக கௌரவ தலைவர் மீனாட்சி சுந்தரம் தொடங்கி வைத்தார் .10,12 , 14 வயது மற்றும் பொது பிரிவினர் என்ற அடிப்படையில் மாணவ, மாணவிகளுக்கு பல கட்ட போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள் .இந்த பணிகளை சுப்ரீம் செஸ் அகாடமி நிறுவனர் ராஜபாரதி சுப்புராஜ் தலைமையில் அனைத்து உடற்கல்வி இயக்குனர்கள் ,உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
நிறைவாக மாலை பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொழிலதிபரும் திமுக பிரமுகருமான ஒ.மாயி கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். ஆண்டிபட்டி பேரூராட்சி சேர்மன் சந்திரகலா முன்னிலை வகித்தார். விழாவில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்கு தேனி மாவட்ட முன்னாள் மகளிர் விரைவு நீதிமன்ற சிறப்பு வழக்கறிஞர் ராஜேஸ்வரி ஜெகநாதன் கலந்து கொண்டு பாராட்டுரை வழங்கினார்.
விழாவில் தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் மகாராஜன், வடுகபட்டி பேரூராட்சி துணைத்தலைவர் அழகர், பிரமுகர் மணி கார்த்திக், டி.சுப்புலாபுரம் தலைமை ஆசிரியர் மகேஷ் மாரியப்பன், பட்டிமன்ற நடுவர் இளங்கோ, ஓய்வு நிர்வாக அலுவலர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். நிறைவாக சுப்ரீம் அகாடமி நிறுவனர் ராஜபாரதி சுப்புராஜ் நன்றி கூறினார்.