BREAKING NEWS

ஆண்டிப்பட்டி அருகே நிலத்தை உட்பிரிவு செய்ய விவசாயியிடம் ரூ 14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குறுவட்ட அளவர் கைது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை.

ஆண்டிப்பட்டி அருகே நிலத்தை உட்பிரிவு செய்ய விவசாயியிடம் ரூ 14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குறுவட்ட அளவர் கைது. லஞ்ச ஒழிப்புத்துறை  போலீசார் நடவடிக்கை.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா குமணன் தொழு கிராமத்தை சேர்ந்தவர் ராமேந்திரன் இவர் விவசாயம் செய்து வருகிறார் இவருக்கு சொந்தமான ஐந்து ஏக்கர்பூர்வீக நிலத்தில் 1.47 ஏக்கர் நிலத்தை உட்பிரிவு செய்வதற்காக வருவாய் துறை இணையதளத்தில் விண்ணப்பித்தார்.

 

 

மூன்று முறை தொடர்ந்து விண்ணப்பித்தும், பல்வேறு காரணங்களினால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து ராமேந்திரன், மயிலாடும்பாறை குறுவட்ட அளவர் செல்வரங்கனிடம் தனது நிலத்தை உட்பிரிவு செய்து தரும்படி கோரிக்கை விடுத்தார். அதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சமாக தரும்படி செல்வரங்கன் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு விவசாய வேலை செய்து வருகிறேன் ஆனால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது கூறியுள்ளார்.

 

 

ரூ.14 ஆயிரம் கொடுத்தால் நிலத்தை அளவீடு செய்து உட்பிரிவு செய்து தருவதாக குறுவட்ட அளவர் செல்வரங்கன் கூறியுள்ளார். தனது சொந்த நிலத்தை உட்பிரிவு செய்ய லஞ்சம் கேட்டதால் மனம் வெறுத்த இராமேந்திரன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் கொடுத்தார். இந்த புகார் மீது தேனி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.சுந்தர்ராஜன் தலைமையிலான போலீசார் விசாரணையை தொடங்கினர்.

 

 

அதன்படி ராமேந்திரனிடம் ரசாயனம் தடவிய ரூ 14 ஆயிரத்தை கொடுத்து அனுப்பி அவரை பின் தொடர்ந்து கண்காணித்தனர். ரசாயனம் தடவி ரூபாய் நோட்டுக்களுடன் மயிலாடும்பாறை குறுவட்ட அலுவலகத்திற்கு வந்த ராமேந்திரன் குறுவட்ட அளவர் செல்வரங்கனிடம் அந்த ரூபாய் நோட்டுகளை கொடுத்தார் அப்போது அங்கே மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குறுவட்ட அளவர் செல்வரங்கனை கையும் களவுமாக பிடித்தனர்.

 

அதன்பின்னர் செல்வரங்கனிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை செய்தனர் விசாரணையில் அவர் லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டார் இதனை அடுத்து சர்வேயர் செல்வரங்கனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். விவசாய நிலத்தை உட்பிரிவு செய்வதற்காக குறுவட்ட அளவையர் ரூ.14ஆயிரம் லஞ்சம் வாங்கிய சம்பவம் மயிலாடும் பாறை பகுதியில் பரபரப்பை ஏஏற்படுத்தி உள்ளது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )