ஆதரவற்ற பெண் குழந்தைக்கு ரூபாய் 3000/- நன்கொடை வழங்கி தொடர்ந்து கல்வி கற்க ஊக்குவிப்பு கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம்:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா – குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் சார்பில் திமிரி ஒன்றியத்திற்குட்பட்ட புங்கனூர் மற்றும் குப்பம் கிராமத்தில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழ உறுப்பினர்களுக்கான கடமை பொறுப்புகள் குறித்த குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் அம்பேத்கர்,கஸ்தூரி ஆகியோர் தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் திருச்செந்தூர் வேலன் முன்னிலை வகித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு – சமுக பணியாளர் திருமதி நிரோஷா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாம்ராஜ்,
காவல்துறை அலுவலர் அனுராதா, மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஈஸ்வரி , கிராம சுகாதார செவிலியர் அமுல் , மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் அமுதா , உஷாராணி மற்றும் பள்ளி குழந்தைகள், துணைத் தலைவர் சுமதி SHG குழு உறுப்பினர்கள், என் ஆர் ஜி ஈ எஸ் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டத்தின் முக்கியத்துவத்தை குறித்தும், குழந்தைகளின் நலன் காக்க மூன்று மாதத்திற்கு ஒரு முறை கூட்டம் தொடர்ந்து நடைபெறவும், நமது கிராமத்தில் குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணம் அற்ற கிராமமாக மாற்றுவதற்காகவும், குழந்தைகள் நலன் பேணும் கிராமமாக திகழ வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குழந்தைகள் அன்றாட சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், அவற்றிலிருந்து தன்னை பாதுகாப்பதற்கான வழிமுறைகள், சைல்டு லைன் 1098 இன் செயல்பாடுகள் மற்றும் முக்கியத்துவம் குறித்தும், குழந்தை உரிமைகள், குழந்தை திருமண தடைச் சட்டம், குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், தொலைபேசி பயன்பாட்டின் கட்டுப்பாடு, மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகள் குறித்து உரையாடப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் குழு உறுப்பினராக கலந்து கொண்ட ஆதரவற்ற பெண் குழந்தை ஒருவருக்கு ஊராட்சி மன்ற தலைவர் அம்பேத்கர் ரூபாய் 2000 யும், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கால்நடை மருத்துவர் லட்சுமணன் ரூபாய் 1000 யும் குழந்தைக்கு வழங்கி தொடர்ந்து கல்வி கற்க ஊக்குவித்தனர். இறுதியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாம்ராஜ் விழிப்புணர்வு ஏற்படுத்தி நன்றி உரை கூறினார். இந்த விழிப்புணர் கூட்டத்தில் மொத்தம் 31 உறுப்பினர்கள் பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து புங்கனூர் ஊராட்சி தொடக்கப்பள்ளி, குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் காவனூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி குழந்தைகளுக்கு திரு. சாம்ராஜ் திருமதி. நிரோஷா ஆகியோர் விழிப்புணர்வு வழங்கினர். அதில் லவ்( LOVE) என்றால் என்ன, குழந்தைப் பருவத்தில் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், உண்மையான அன்பு செலுத்துபவர்கள் பெற்றோர்கள் தான் என்பதை உணர்த்தும் வகையிலும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
குழந்தை திருமணங்கள் ஏன், எந்த சூழலில் நடத்தப்படுகின்றது, குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடைமைகள், பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சவால்களை குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் குழந்தை திருமண தடைச் சட்டம், பாதுகாப்பு சட்டம் குறித்தும் கல்வியின் அவசியம் குறித்தும் , குழந்தைகளுக்கு எதிரான பிரச்சனைகளை பற்றி தகவல் அளிக்க சைல்டு ஹெல்ப் லைன் 10 9 8 அழைத்துப் பயன்பெறவும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்வில் 465 பள்ளி குழந்தைகளும், 15 ஆசிரியர் பெருமக்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.