ஆதிதிராவிட மக்களுக்கு 17 வீட்டு மனைகள் கழிவு நீர் மற்றும் கழிப்பறை கழிவுகளை திறந்து விடுவது கண்டித்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு

தேனிசெய்தியாளர் முத்துராஜ்
தேனி மாவட்டம் ஊஞ்சம்பட்டி ஊராட்சி, இந்திரா நகர் காலனி பொதுமக்கள், 1982 ஆம் ஆண்டு அரசு ஆதிதிராவிடர் நலத்துரையால் ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கியது.
ஆதிதிராவிட மக்களுக்கு 50 வீட்டு மனைகளும் கொடுத்தது போக மீதம் 17 வீட்டு மனைகள் எதிர்கால தேவைக்கு ஒதுக்கப்பட்டதில் மற்றும் சமூக மக்கள் வீடு கட்டி குடியிருந்து வருகிறார்கள்.
மேலும் 15 வீடுகளுக்கான தெரு வடக்குப் புறம் இருந்தும் ஆதிதிராவிடர் நலத்துறையால் பிற்கால பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 17 பிளாட்டுகள் அபகரிக்கும் நோக்கத்தில்,
பொது பயன்பாட்டிற்கென எதிர்கால வேலைக்கு ஒதுக்கப்பட்ட தென் புறம் உள்ள 17 பிளாட்டுக்களில் கழிவு நீர் மற்றும் கழிப்பறை கழிவுகளை திறந்து விடுவது உழவு எந்திரங்களை நிறுத்துவது என தொடர்ந்து செயல்படுகிறார்கள்.
இதனால் பலமுறை இரு வேறு சமூகத்தாருக்கு மோதல் நடந்து வழக்குகளும் நடந்து வருகிறது.
எனவே ஆதிதிராவிட மக்களுக்கு எதிர்கால தேவைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி வீடு இல்லாத ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டு மனை வழங்கி, வீடு கட்டித் தரவும்,
மாற்று சமூகத்தார் அவர்களுக்குரிய பாதையில் நடக்கவும் நடவடிக்கை எடுத்து இரு சமூக மக்களுக்கு பிரச்சினை இன்றி சுமூகமாக வாழ ஆவணம் செய்யுமாறு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை