ஆத்தூர் அருகே அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா..

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புது கொத்தாம்பாடி பகுதியில் அமைதிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சக்தி வினாயகர் மற்றும் ஸ்ரீசக்தி மாரியம்மன் ஆகிய திருக்கோவில்கள் புதிதாக புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் நேற்று காலை விநாயகர் வழிபாடு, லட்சுமி பூஜை, கணபதி ஹோம், வாஸ்து பூஜை, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி, இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது பின்னர் அம்மனுக்கு பால்குடம் மற்றும் முளைப்பாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது,
அதைத்தொடர்ந்து இன்று காலை முதற்கடவுள் வழிபாடு இரண்டாம் கால மண்டப அர்ச்சனை இரண்டாம் கால வேத காட்சிகளை மகாபூர்ணாகுதி செய்து யாக பூஜை நிறைவு செய்து புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை யாகசாலையில் வைத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர்.
மேலும் குருக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி மேளதாளம் வானவேடிக்கையுடன் ஊர்வலமாக வந்து கோபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது,
அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்களுக்கு புனித நீரை தெளித்தனர். பின்னர் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து அருள்பெற்றனர். மேலும் விழா குழு சார்பாக அப்பகுதியில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.