ஆத்தூர் அருகே கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பிரசித்திப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அப்பம்மசமுத்திரம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு,
மூலவர் முன்பு பார்வதி சிவன் மலர்கால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார், பின்னர் புனித நீர் நிரப்பப்பட்ட 108 சங்குகள் மற்றும் பிரதான கலசங்களை வைத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு யாக குண்டம் அமைத்து சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.
இந்த யாகபூஜையில் பக்தர்கள் ஹர ஹர பார்வதி நமக என கோஷங்கள் எழுப்பி பின்னர் அருணாச்சலேஸ்வரருக்கு, பால், சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் புனித நீர் நிரப்பப்பட்ட 108 சங்குகளை கொண்டு மகா அபிஷேகமும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அருணாச்சலேஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது – இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டு சென்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.