ஆத்தூர் அருகே வைக்கோல் ஏற்றி வந்த ஈச்சர் லாரி மீது மின் கம்பி உரசி தீப்பற்றி எரிந்து சேதம்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கீரிப்பட்டி சேர்ந்த சக்திவேல்(43) என்பவருக்கு சொந்தமான ஈச்சர் லாரியில் வெளியூரில் இருந்து கால்நடைகளுக்கு வைக்கோல் ஏற்றி வந்து கீரிப்பட்டி மட்டுமின்றி மல்லியகரை அரசநத்தம் கருத்தராஜபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு வைக்கோல் விற்பனை செய்து வருகிறார், இந்நிலையில் இன்று கடலூரில் இருந்து ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதியில் வைக்கோல் விற்பனைக்காக ஈச்சர் லாரியில் எடுத்து சென்றனர்,

அப்போது ஈச்சம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின் கம்பியில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி உரசியதால் தீ பிடித்து மளமள என எரிந்து ,வைக்கோல் மற்றும் 14 லட்சம் மதிப்புள்ள ஈச்சர் லாரியும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது, தகவலறிந்து வந்த ஆத்தூர் தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர் .


மேலும் வாகன ஓட்டுனர் சக்திவேல் லாரியில் இருந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கீழே குதித்த போது அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது உடனடியாக 108 வாகனத்தின் மூலம் லாரி ஓட்டுனரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மல்லியகரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
