BREAKING NEWS

ஆத்தூர் அருகே ஸ்பேர் பார்ட்ஸ் கடை உரிமையாளர் கடன் தொல்லையால் விஷம் அருந்தி தற்கொலை போலீஸ் விசாரணை.

ஆத்தூர் அருகே ஸ்பேர் பார்ட்ஸ் கடை உரிமையாளர் கடன் தொல்லையால் விஷம் அருந்தி தற்கொலை போலீஸ் விசாரணை.

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்பகனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சின்னத்தம்பி இவர் காட்டுக்கோட்டை பகுதியில் ஹார்டுவேர் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வந்துள்ளார், இவருக்கு திருமணமாகி சித்ரா என்கிற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளன.

 

இந்த நிலையில் அவர் செய்துவந்த தொழிலுக்காக வெளியில் வட்டிக்கு கடன் வாங்கி முதலீடு செய்துள்ளார் அதில் தொழிலில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டு பணம் கொடுத்தவர்கள் பணத்தை தரும்படி கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது,

 

 

 இந்நிலையில் நேற்று முன்தினம் கடைக்குச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் நேற்று அவரது சகோதரர் ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இதன் அடிப்படையில் போலீசார் சின்னத்தம்பி தேடி வந்த நிலையில்,..

 

இன்று அதிகாலையில் ஆத்தூர் அருகே சமத்துவபுரம் வளையமாதேவி செல்லும் சாலையின் அருகே பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலுடன் ஒருவர் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து பின்னர் ஆத்தூர் ஊரக போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

 

 

சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற போலீசார் உடலை கைப்பற்றி ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டதில்..,

 

காணாமல் போன கல்பகனூர் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பதும் அவர் தொழில் ஏற்பட்ட நஷ்டத்தினால் கடன் தொல்லையின் காரணமாக விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது, 

 

 

 மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த ஆத்தூர் ஊரக போலீசார் விசாரணை செய்து வருகின்றன,

 

கடன் தொல்லையால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )