BREAKING NEWS

ஆத்தூர் உடையார் பாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பால்குட ஊர்வலம் – 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு.

ஆத்தூர் உடையார் பாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பால்குட ஊர்வலம் – 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு.

சேலம் மாவட்டம் ஆத்தூர் தெற்கு உடையார்பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் 41ஆம் ஆண்டு வைகாசி பெருவிழா.
ஆண்டுதோறும் அம்மனுக்கு பொங்கல் வைத்தல் பால்குடம், பூங்கரகம்,அக்னிச்சட்டி எடுத்தல் விமான அளவுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெறும்.


கொரோனா நோய் தொற்று காரணமாக கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறாமல் இருந்து வந்தது நிலையில் ,தற்போது வைகாசி பெருவிழா தொடங்கியது,
இதனையடுத்து அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு கணபதிஹோமம் சக்தி அழைத்தல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி தொடங்கி முடிவுற்ற நிலையில் ,
இன்று ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .

இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பால் குடங்களை ஏந்தி உடையார்பாளையம் ,பேருந்து நிலையம் ,காந்தி நகர், உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்களுடன் ஊர்வலமாக சென்று கோவிலை சென்றடைந்தது பின்னர் அங்கு அர்ச்சகர் மூலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு ஊர்வலமாக பக்தர்கள் கொண்டு வந்த பாலை ஊற்றி அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )