BREAKING NEWS

ஆத்தூர் ஒன்றியத்தில் இந்து முன்னணியின் 3 மணி நேர பயிற்சி முகாம் நடைபெற்றது.

ஆத்தூர் ஒன்றியத்தில் இந்து முன்னணியின் 3 மணி நேர பயிற்சி முகாம் நடைபெற்றது.

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்தில் இந்து முன்னணியின் 3 மணி நேர பயிற்சி முகாம் செம்பட்டியில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் நடைபெற்றது.

 

திண்டுக்கல் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வீரக்கல் சி ஜெயராம் அவர்கள் தலைமை தாங்கினார் மதுரை கோட்ட பொறுப்பாளர் பாலன் ஜி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாடினார்.

 

 

திரு பாலன் ஜி அவர்கள் பேசுகையில் இந்துக்கள் மதம் மாறுவதை தடுக்கவும் இந்து கோவில்களை பாதுகாக்க போராட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் நிகழ்ச்சியில் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

நிகழ்ச்சி கலந்து கொண்ட பொறுப்பாளர்கள் அனைவரும் இந்து கோயில்களை காக்க ஒன்று படுவோம் மத மாற்றத்தை தடுத்திடுவோம் இந்துக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் இந்துக்களை ஒன்றிணைத்திடுவோம்,..

 

இந்திய தயாரிப்பு அல்லாத மற்ற மற்ற  நாட்டின் பொருட்களை வாங்க மாட்டோம் வரும் தீபாவளி திருநாளில் சீன பட்டாசுகளை புறக்கணிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )