BREAKING NEWS

ஆத்தூர்- புரட்டாசி மாத கடைசி வார சனிக் கிழமையை முன்னிட்டு ஸ்ரீராம கிருஷ்ணருக்கு அபிஷேக ஆராதனை.

ஆத்தூர்- புரட்டாசி மாத கடைசி வார சனிக் கிழமையை முன்னிட்டு ஸ்ரீராம கிருஷ்ணருக்கு அபிஷேக ஆராதனை.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அக்ரஹாரம் தெருவில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகளை கடந்த ஸ்ரீ ராம கிருஷ்ணருக்கு புரட்டாசி கடைசி சனிக்கிழமை வார விழாவில் அபிஷேக ஆராதனை உடன் வழிபாடு நடைபெற்றது.

 

முன்னதாக புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை அன்று விரதங்கள் கடைபிடிக்கப்பட்டு இன்று கடைசி வார சனிக்கிழமை விரதம் நிறைவு பெற்றது. இதையடுத்து. ஸ்ரீ ராம கிருஷ்ணருக்கு பஜனை கீர்த்தனைகள் பாடப் பெற்று அபிஷேக ஆராதனை வெகு விமர்சியாக நடைபெற்றது.

 

 

விழாவில் சிறியவர் முதல் முதியவர் வரை நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ராமகிருஷ்ணரை தரிசனம் செய்தனர். நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் அவில் கேசரி, சுண்டல் முதலியன பிரசாதமாக வழங்கப்பட்டது.

 

மேலும் விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராமகிருஷ்ண பஜனை மட கமிட்டியார் செய்திருந்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )