ஆத்தூர் மணிக்கூண்டு அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கஞ்சா புகையிலை போன்ற போதை பொருட்களை ஒழிக்க ஆர்பாட்டம் நடைப்பெற்றது.

சேலம்:
ஆத்தூர் மணிக்கூண்டு அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கஞ்சா புகையிலை போன்ற போதை பொருட்களை முற்றிலுமாக ஒலிக்க வலியுறுத்தி சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜே.பி. (எ)ஜெயபிரகாஷ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் கலந்து கொண்டு,
போதைப் பொருட்களுக்கு எதிராக முழக்கமிட்டு தமிழ்நாடு அரசு முற்றிலுமாக போதை பொருட்களை ஒழிக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். இந்நிகழ்வில் வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்திக் சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் ஆர்.வி.பச்சமுத்து மாநில செயற்குழு உறுப்பினர் எம்.பி. நடராஜ் மயில்சாமி,
ஆத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கசாப்பு செந்தில்குமார்,நகர செயலாளர்கள் மணிகண்டன்,சங்கர், மற்றும் மாநில தகவல் தொழில்நுட்ப அணி கௌஷிக் மணிவண்ணன், வினோத்,மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
