BREAKING NEWS

ஆத்மாலயா மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி துவக்க விழா.

ஆத்மாலயா மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி துவக்க விழா.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் ஆத்மாலயா மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி துவக்க விழா ஜூன் 22 அன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சிவசுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்ட நடுவர் வ.யுரேகா கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்து பேசினார்.

உடன் குத்தாலம் பேரூராட்சி மன்றத் தலைவர் சங்கீதா மாரியப்பன் பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித்.வர்த்தக சங்க பேரமைப்பு தலைவர் சாமிசெல்வம் ராஜமாணிக்கம் சிவகுமார் காங்கிரஸ் கட்சியின் சார்பாக M.S.B.T சூர்யா. நவாஸ் மற்றும் அரிமா சங்கம் சார்பாக மகாலிங்கம் சிக்கந்தர் ஹயத்கான் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் நேற்று முதல் முறையாக குத்தாலத்தில் துவங்கப்பட்ட பள்ளியில் 15 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர் இப்பள்ளியில் 5 வயது முதல் 16 வயது வரை உடைய மாணவ மாணவிகளை சேர்த்துக் கொள்ளப்படும் என்றும் ஒருங்கிணைப்பாளர் சிவசுப்பிரமணியன் கூறினார் இறுதியாக பாஸ்கர் நன்றியுரையாற்றினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )