BREAKING NEWS

ஆந்திராவில் பிச்சைகாரர் ஒருவர் அரசு ஊழியராக மாறிய சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஆந்திராவில் பிச்சைகாரர் ஒருவர் அரசு ஊழியராக மாறிய சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள படாப்பட்டினம் அருகே உள்ள பெத்தசேதி கிராமத்தில் வசித்து வருபவர் அல்லகா கேதாரேஸ்வர ராவ் (55). கைத்தறி தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்த இவர் பி.எட் முடித்துவிட்டு ஆசிரியராக வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

கேதாரேஷ்வர ராவின் பெற்றோர் இறந்த நிலையில், உடன்பிறந்தவர்களால் வெறுக்கப்பட்டு வேலையின்றி யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார். இதற்கிடையே, 1994-ம் ஆண்டு ஆசிரியர் அரசுப்பணிக்கு தேர்வு எழுதிய கேதாஸ்வர ராவ் குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் வேலையை இழந்தார்.

பின்னர், 1998-ம் ஆண்டு நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுப் பதிவு செய்தபோதும் பணி கிடைக்காமல் போனது. இதனால், உடை, உணவின்றி ஒருவேளை உணவிற்காக ஏங்கி வந்த இவருக்கு 24 ஆண்டுகள் கழித்து தற்போது பணி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இவருக்கு வயது 50 தொட்டுவிட்ட நிலையில் அரசு பணி கிடைத்திருக்கிறது.

இருப்பினும் கேதாஸ்வர ராவுக்கு இதுகுறித்து எந்த தகவலும் இல்லை, மேலும் பணி ஆணை வந்திருக்கும் செய்தியைக் கிராம இளைஞர்கள் வாயிலாக தெரிந்து கொண்டார். அவர், சான்றிதழ்கள் வைத்திருப்பதால் மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆர்வமுடன் இருப்பதாக இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். பிச்சைக்காரராக இருந்து அரசு ஊழியராக உள்ளவரை கிராம இளைஞர்கள் குளிக்க வைத்து முடிதிருத்தம் செய்து கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )