BREAKING NEWS

ஆம்பூரில் கட்டட பணிகள் ஈடுபட்டிருந்த மேஸ்திரி மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார் . ஆம்பூர் நகர போலீசார் விசாரணை..

ஆம்பூரில் கட்டட பணிகள் ஈடுபட்டிருந்த மேஸ்திரி மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார் . ஆம்பூர் நகர போலீசார் விசாரணை..

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே முக்கா கொல்லை பகுதியில் வசித்து வருபவர் அப்துல் ஹக்கீம் , இவரது வீட்டை கட்டும் பணியில் பொன்னபல்லி பகுதியைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி நீலகண்டன் என்பவர் ஈடுபட்டு வந்துள்ளார்.

 

அப்போது மேல் மாடியில் உயர்மின் கம்பம் அருகே பணியில் இருந் மேஸ்திரி மீது திடீரென மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளார்.

 

இதையடுத்து அவருடன் பணிபுரியும் சக ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நீலகண்டன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் . அதைத் தொடர்ந்து ஆம்பூர் நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )