BREAKING NEWS

ஆயப்பாடியில் தனியார் பள்ளியில் இலவச மருத்துவ மற்றும் இரத்த தான முகாம்.

ஆயப்பாடியில் தனியார் பள்ளியில் இலவச மருத்துவ மற்றும் இரத்த தான முகாம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆயப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆயப்பாடி சமூக நல அறக்கட்டளை மற்றும் காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்த தான முகாமும் பரிசோதனையும் நடைபெற்றது.

முகாமில் சமூக ஆர்வலர் முஜிபுர் ரஹ்மான், மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்திருந்தனர், முகாமினை சமூக ஆர்வலரும் மூத்த நுண்ணுயிரியாளருமான ஜாஹீர் உசேன் துவங்கி வைத்தார். இதில் பொதுமருத்துவம், சர்க்கரை நோய், கண் மருத்துவம், குழந்தை மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம் என பல துறை சார்ந்த மருத்துவர்கள் பங்கேற்று சிகிச்சை அளித்தனர்.

பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். மேலும் முகாமில் ஏராளமானோர் இரத்த தானம் செய்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )