BREAKING NEWS

ஆயுதப்படை காவலரின் கர்ப்பிணி மனைவி தூக்கிட்டு தற்கொலை!! திண்டுக்கலில் பரபரப்பு!!

ஆயுதப்படை காவலரின் கர்ப்பிணி மனைவி தூக்கிட்டு தற்கொலை!! திண்டுக்கலில் பரபரப்பு!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் வசித்து வருபவர்  வினித் பாலாஜி. இவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் முத்து பாண்டீஷ்வரிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.  வினித் பாலாஜி உதகை ஆயுதப் படை காவலராக பணிபுரிந்து வருகிறார்.  5 மாத கர்பிணியான முத்துபாண்டீஸ்வரி நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை

பின்னர் இது குறித்து தகவல் அறிந்த முத்துப் பாண்டீஸ்வரியின் பெற்றோர், வரதட்சனை கொடுமை காரணமாக தங்கள் மகள் இறந்ததாகவும், மகள் சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்   கூறியும் உதகை நகர மேற்கு காவல் நிலையம் மற்றும் கோட்டாச்சியரிடம் மனு கொடுத்தனர்.

இதுகுறித்து முத்துப்பாண்டீஸ்வரியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்களிடம்  கோட்டாச்சியர் விசாரணை நடத்தியதை தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமை செய்தல், தற்கொலைக்கு  தூண்டுதல் உட்பட பல்வேறு  பிரிவுகளில்  வழக்கு பதிவு செய்த உதகை காவல் துறையினர் காவலர் வினித் பாலாஜி மற்றும் அவரது  தந்தை ராதாகிருஷ்ணன்  தாய் கவிதா ஆகிய 3 பேரை கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. மகளின் திருமணத்தின் போது வரதட்சணையாக 18 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் கொடுக்கப்பட்டது. ஆனாலும் கூடுதலாக பணம் மற்றும் இருசக்கர வாகனம் வரதட்சணையாக வாங்கி வரவேண்டும் என்று கூறி எங்கள் மகளை கொடுமைப்படுத்தியுள்ளனர். எனவே எங்கள் மகள் சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )