BREAKING NEWS

ஆயுதப்படை காவலர் தற்கொலை!! போலீசையே காவு வாங்கிய கந்து வட்டி!!

ஆயுதப்படை காவலர் தற்கொலை!! போலீசையே காவு வாங்கிய கந்து வட்டி!!

கடலூர் மாவட்டம் புவனகிரி, மதுவானை மேடு கிராமத்தில் வசித்து வருபவர் 27 வயதான  செல்வகுமார். இவர்  உளுந்தூர்பேட்டை 10-வது பட்டாலியனில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இவர், ஜூன்1ம் தேதி, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்திருந்தார். மனுவைக் கொடுக்க  நீதிமன்றம் அருகே  வந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.

அப்போது பாதுக்காப்புக்கு இருந்த சக காவலர்கள் செல்வகுமாரை மீட்டு, சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில்  சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, தான் அவர் தற்கொலை முயற்சி செய்து விஷம் குடித்தது தெரியவந்தது. இதனை அறிந்த கடலூர் 3-வது மாஜிஸ்திரேட்டு ரகோத்தமன் நேரில் சென்று வாக்குமூலம் பெற்றார்.

அதன்பின் அவரை மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் காவலர் செல்வகுமார் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், குடும்ப செலவுக்காக அதேபகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணிடம் ரூ. 5 லட்சம் கடன் வாங்கிய நிலையில், அந்த பணத்தை திருப்பி 2 தவணையாக செலுத்தியுள்ளார். இருப்பினும், 2 ஆண்டுகளுக்கு பின் கடன் வாங்கிய ரூ. 5 லட்சம் ரூபாய்க்கு தற்போது வட்டியுடன் ரூ. 12 லட்சம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த காவலர், பணத்தை தர மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் தொடர்ச்சியாக காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்த நிலையில், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.கடலூரில் கந்துவட்டி கொடுமையினால் காவலரே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்குள்ள காவலர்கள் மத்தியில் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )