ஆயுதப் படைக் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!!
ஆயுதப் படைக் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!!
தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகளில் நேரடி வகுப்புக்கள் நடத்தப்பட்டு நடப்பாண்டில் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்கள் உற்சாகத்துடன் தேர்வுகளை எழுதி வருகின்றன. இந்த விடைத்தாள்கள் மாவட்டம் வாரியாக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கண்காணிப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.அதன்படி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சேந்திரக்கிள்ளை கிராமத்தில் வசித்து வருபவர் 26 வயதான பெரியசாமி. இவர் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் மே 6 ம் தேதி முதல் சிதம்பரம் தனியார் பள்ளியில் விடைத்தாள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பணியில் ஈடுபட்டிருந்த இவர், இன்று அதிகாலை துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன், சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ் ராஜ் உட்பட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.