ஆய்வின்போது பணியில் இல்லாத டாக்டருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் மாநகராட்சி மேயர் நடவடிக்கை.

தஞ்சாவூர் மாநகராட்சியில் நம்ம வார்டு நம்ம மேயர் என்ற திட்டத்தின் படி மாநகராட்சி மேயர் ராமநாதன் ஆய்வு செய்து வருகிறார் இதனையடுத்து மாநகராட்சிக்கு உட்பட்ட 31 வது வார்டு மகர் நோன்பு சாவடி பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு பணிபுரியும் டாக்டர் பணியில் இல்லை மேலும் அங்கு பணிபுரிபவர்களும் குறைவாகவே வந்துள்ளனர் இதனையடுத்து மாநகராட்சி மேயர் ராமநாதன் வருகை பதிவேட்டில் வருகை தராதவர்களுக்கு ஆப்சென்ட் போட்டு பணியில் இல்லாத காரணத்தால் மருத்துவர் உள்ளிட்டவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அப்போது கவுன்சிலர் ஜெய்சதீஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர் இந்த மருத்துவமனையில் அப்பகுதியில் உள்ள ஏராளமானோர் சிகிச்சை பெறுவர் இந்நிலையில் ஆய்வின் போது டாக்டர் பணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
