BREAKING NEWS

ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் குண்டு வீச்சு: கேரளாவில் நடந்த பயங்கரம்.

ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் குண்டு வீச்சு: கேரளாவில் நடந்த பயங்கரம்.

கேரளாவில் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் அதிகாலையில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டம் பையனூரில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்க (ஆர்எஸ்எஸ்) அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் மர்மநபர்கள் இன்று அதிகாலை வெடிகுண்டு வீசினர். இதில் கட்டிடத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

 

இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், “கண்ணூர் மாவட்டம் பையனூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம் மீது வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் கட்டிடத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்த நிலையில் இன்று அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தில் யார் ஈடுபட்டுள்ளனர் என்று விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தனர். ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் கண்ணூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )