ஆற்றுக் கால்வாயில் பாலம் கட்டிய நபரால் சர்ச்சை.
ஆற்றுக் கால்வாயில் பாலம் கட்டிய நபரால் சர்ச்சை.

தி.மு.க கவுன்சிலரின் உதவியுடன் தனியார் நபர்கள் கிருதுமால் ஆற்று கால்வாயில் பாலம் கட்டி உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
மதுரை மாநகராட்சி 68-வது வார்டுக்கு உட்பட்ட பொன்மேனி, காந்திஜி தெரு விரிவாக்க பகுதியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான கிருதுமால் நதி கால்வாயை ஆக்கிரமித்து பால்சாமி மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் பாலம் கட்டியதாக கூறப்படுகிறது.
இந்த பாலம் கட்டினால் தான், தங்களது ரியல் எஸ்டேட் இடங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முடியும் என சுயநலமாக யோசித்து தேவையற்ற இடத்தில் நீர் நிலையை ஆக்கிரமித்து தனியார் நபர்கள் பாலம் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கைகள் இல்லை எனவும், 68-வது வார்டுக்கு உட்பட்ட தி.மு.க. கவுன்சிலர் மூவேந்திரன் ரியல் எஸ்டேட் விற்பனையாளர்களுக்கு ஆதரவாக நடக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கூறியுள்ளதாகவும், பாலத்தை இடிக்காமல் அதிகாரிகள் கண் துடைப்பிற்கு போர்டு ஒன்றை மட்டும் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் சட்ட விரோத செயலுக்கு துணை போவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ரமணி என்பவர் முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகார் ஒன்றையும் அனுப்பியுள்ளார். அவரிடம் இது குறித்து பேசினோம், “சம்மந்தப்பட ரியல் எஸ்டேட் இடத்திற்கு பாதை இல்லை என கிருதுமால் நதி கால்வாயை ஆக்கிரமித்து பாலம் போட்டுள்ளனர். பிற்காலத்தில் பாலம் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் இடம் வாங்கிய நபர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

