ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் தினமும் ஏராளமான நோயாளிகள் வருகின்றனர். ஆனால் ஊழியர்கள் பற்றாக்குறையால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவலம்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக ஆலங்குளம் விளங்கி வருகிறது. இங்கு நோயாளிகளுக்காக ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 ஆண்டுகளுக்கு பின்னர் தரம் உயர்த்தப்பட்டு அரசு மருத்துவமனையாகியது. ஆனாலும் இங்கு போதிய மருத்துவர்கள், பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.
நவீன சிகிச்சை உபகரணங்களும் அளிக்கப்படவில்லை என்பதால் இப்பகுதி நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
முக்கியமாக நாளொன்றுக்கு 10 பிரசவங்கள் வரை நடைபெற்று வந்த நிலையில் இங்கு வரும் கர்ப்பிணிகளை அருகில் உள்ள நெட்டூர் சுகாதார நிலையத்திற்கும், தென்காசி அல்லது நெல்லை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி விடுகின்றனர்.
இங்கு பணிபுரியும் ஊழியர்கள் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் அலைக்கழிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.மொத்தத்தில்யாருக்கும் பயனில்லை