BREAKING NEWS

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் உலகத்தரம் வாய்ந்த உள் விளையாட்டு அரங்கம் அமைக்க முன்னாள் எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா 5 ஏக்கர் நிலம் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் உலகத்தரம் வாய்ந்த உள் விளையாட்டு அரங்கம் அமைக்க முன்னாள் எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா 5 ஏக்கர் நிலம் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

ஆலங்குளம் முன்னாள் எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

ஆலடி அருணா அறக்கட்டளை முக்கிய நோக்கங்களில் ஒன்றானது கல்வி, விளையாட்டு துறை வாயிலாக இளைய சமுதாயத்தை முன்னேற்றிட வேண்டும் என்பதே தமிழக முதல்வர் ஒவ்வொரு தொகுதியிலும் உலகத்தரம் வாய்ந்த உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

எனவே ஆலடி அருணா அறக்கட்டளை சார்பில் அரசு உள் விளையாட்டு அரங்கத்தை அமைத்திட ஆலங்குளம் தாலுகா புதுப்பட்டி கிராமத்திலுள்ள ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்கிட தயாராக உள்ளது.

மேலும் இந்த விளையாட்டரங்கம் சர்வதேச அளவில் உருவாக்கிட ஆலடி அருணா அறக்கட்டளை வாயிலாக உதவிட விரும்புவதாகவும். எனவே ஆலங்குளம் தொகுதியில் விளையாட்டு துறையில் மாணவ-மாணவியர்கள் உயர்ந்திட தனது தந்தை ஆலடி அருணா வழியில் பங்களிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் இருந்து பொதுமக்கள் சார்பாக தன்னிடம் வழங்கப்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைம்பெண் உதவித்தொகைக்கான மனுக்களையும் கலெக்டரிடம் வழங்கினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )