BREAKING NEWS

ஆவடியில் லஞ்சம் வாங்கிய வணிக உதவி பொறியாளர் கைது.

 

ஆவடி கோவில்பதாகை பழைய அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர் சுலோச்சனா/ 62. இவரது தம்பி ஜெயபாலன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் வீடு கட்டுவதற்கு வழங்கப்பட்ட வணிக மின் இணைப்பை வீட்டு மின் இணைப்பாக மாற்ற ஆவடி கோவில் பதாகையில் உள்ள மின்சார வாரியத்தில் விண்ணப்பித்து இருந்தார்.

அதை பரிசீலித்த மின் வணிக உதவியாளர் மரியதாஸ் இதற்கு ரூ.5000 பணம் லஞ்சம் கேட்டு பின் 3000 ரூபாய் வழங்க கூறியுள்ளார்.. இந்த நிலையில் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத சுலோச்சனா, இது குறித்து திருவள்ளூர் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவில் புகார் அளித்தார்.
அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், மரியதாஸ் லஞ்சம் பெறும் போது சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர். கடந்த வருடத்தில் இதே மின்வாரிய அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய ஊழியர் கைது செய்யபட்டது குறிப்பிடத்தக்கது..https://youtu.be/5HF0wxR0g6E

Share this…

CATEGORIES
TAGS