BREAKING NEWS

ஆவின் பால் கொள்முதல் நிலையம் முன்பு பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி சேலம் அருகே கரவை மாடுகளுடன் மறியல் ஆர்ப்பாட்டம்.

ஆவின் பால் கொள்முதல் நிலையம் முன்பு பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி சேலம் அருகே கரவை மாடுகளுடன் மறியல் ஆர்ப்பாட்டம்.

 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டி கிராமத்தில் ஆவின் பால் கொள்முதல் நிலையம் முன்பு பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி கரவை மாடுகளுடன் மறியல் ஆர்ப்பாட்டம்.

 

தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டிற்கு பின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை இக்காலத்தில் தவிடு பருத்திக்கொட்டை புண்ணாக்கு கலப்புத்தீவனம் உட்பட அனைத்து பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் 

 

பாலுக்கு ஒரு லிட்டருக்கு பத்து ரூபாய் விகிதம் உயத்தியும் பசும்பாலுக்கும் ரூபாய் 42 ரூபாய் எருமை பாலுக்கு 51 ரூபாய் என அறிவித்திட பால் பண பாக்கி ஊக்கத்தொகை போனஸ் உள்ளிட்டவற்றை தீபாவளிக்கு முன்பாக வழங்கிட ஆரம்ப சங்கத்திலிருந்து,..

 

பால் வாகனத்தின் ஏற்றுவதற்கு முன்பாக அளவையும் தரத்தையும் குறித்து கொடுத்திட ஆவின் கலப்பு தீவனம் 50 சதம் மானிய விலையில் வழங்கிட ஆரம்ப சங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு பணி பாதுகாப்பு செலுத்திட பால் விற்பனை நிலைய ஒரு லிட்டருக்கு ரூபாய் மூன்று வீதம் குறைந்ததால் ஒரு வருடத்திற்கு ஏற்படும் இது 270 கோடியை தமிழக அரசு வழங்கிட வேண்டும்.

 

ஆவினில் நடைபெறும் ஊழல் முறைகேடு ஊதாரித்தனம் ஆகியவற்றை தடுத்து நிறுத்திட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 

இதில் தலைமை : செல்வகுமார் மாவட்ட உதவி செயலாளர்,

அன்பழகன் தமிழ்நாடு விவசாய சங்கம் மாவட்ட தலைவர்,

தங்கவேல் தாலுக்கா தலைவர்,

சீனிவாசன் தமிழ்நாடு விவசாய சங்க தாலுகா செயலாளர்,

பழனிமுத்து தமிழ்நாடு விவசாய சங்க தாலுகா தலைவர்,

சுப்பிரமணி தமிழ்நாடு விவசாய தாலுக்கா உதவி தலைவர்,

மற்றும் பால் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )