ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள அந்தோனி அல்பானீஸுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள அந்தோனி அல்பானீஸுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உள்ள 151 இடங்களில் ஆட்சி அமைக்க 76 இடங்கள் தேவை என்ற நிலையில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து பிரதமரும், ஆளும்கட்சியான கன்சர்வேடிவ் கட்சித் தலைவரான ஸ்காட் மோரீசன் தோல்வியை ஒப்புக்கொண்டு ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள அந்தோனி அல்பானீஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்தான தனது பதிவில், ‘இருநாட்டு உறவை வலுப்படுத்த , விரிவுபடுத்த மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சமமான முன்னுரிமைகளுக்கு தேவையான வேலையை செய்ய விரும்புவதாகவும்’ பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.