ஆ.ராசா இந்துக்களை இழிவாக பேசியதை கண்டித்து இந்து முன்னணி அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் மேற்கு ஒன்றியம் சின்னாளப்பட்டியில் தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இந்துக்களை இழிவாக பேசியதை கண்டித்து மேற்கு மாவட்ட செயலாளர் வீரக்கல் ஜெயராம் தலைமையில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் இந்து நல வியாபாரிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பழனி ஜெகன், இந்து முன்னணி மதுரை கோட்ட செயலாளர் பாலன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் பேசினர் திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ ராசா அவர்களை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி ஆத்தூர் ஒன்றிய பொறுப்பாளர்களும் சின்னாளப்பட்டி நகர பொறுப்பாளர்களும் மகளிர் அணியினரும் இளைஞர் அணியினரும் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ராசாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
ஹிந்துக்களை இழிவு படுத்தி பேசிய ஆ ராசா அவர்களை கைது செய்யக் கூறியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யக் கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்பிற்காக சின்னாளப்பட்டி பகுதியில் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.