இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருந்த நேரத்தில், மாடு பிடிக்க சென்ற போது இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலி.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் மற்றும் உள்வட்டம் அனந்தலை கிராமம் கணபதி நகர் என்ற முகவரியைச் சேர்ந்த செல்வன் விக்னேஷ் தபெ.முனிசாமி (வயது 18) என்பவர் இன்று (17.03.2023) மாலை 05.30 மணியளவில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் தங்களுக்கு சொந்தமான மாட்டினை பிடிக்க சென்ற போது இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
இவர் பூந்தமல்லியில் உள்ள வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் ECE முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவரது தந்தை ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இறந்த நபருக்கு உடன் பிறந்த சகோதரர் சரவணன் என்பவர் உள்ளார்.
இந்த தகவல் தெரிந்தவுடன் இறந்த நபரின் உடலுக்கு வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களும் மாவட்ட ஆட்சியர் ச வளர்மதி இஆப , அவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
தொடர்ந்து அவரின் தாயார் மற்றும் சகோதரரிடம் ஆறுதல் தெரிவித்து இடி தாக்கி உயிரிழந்த இளைஞருக்கு தமிழ்நாடு அரசின் மூலம் உடனடியாக நிவாரண நிதி உதவி பெற்று வழங்கப்படும்.
அதற்கான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.