இந்தியாவிலேயே ஆட்சியின் குறை நிறைகளை மக்களிடையே நேரில் சென்று கேட்கும் ஒரே முதல்வர் தமிழக முதல்வர் மட்டுமே.
இந்தியாவிலேயே ஆட்சியின் குறை நிறைகளை மக்களிடையே நேரில் சென்று கேட்கும் ஒரே முதல்வர் தமிழக முதல்வர் மட்டுமே.
திராவிட மாடலுடன் தேசிய மாடல் குறித்து ஒரேமேடையில் விவாதம் செய்ய தயாரா என குருமூர்த்திக்கு எச்சரிக்கை….
சட்டமன்ற உறுப்பினர் பேருந்தின் முன் இருக்கையில் இலவசமாக பயணம் செய்யலாம் என பொதுமக்களுக்கு தெரிந்தது கூட பாஜக அண்ணாமலைக்கு தெரியாமல் போனது கொடுமை என கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் ஆத்தூர் வெங்கடேஷ் பேச்சு…
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகர திமுக சார்பில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமையில் நகர செயலாளர் என்.ஆர்.நகராஜ் முன்னிலையில் நடைபெற்றது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் ஆத்தூர் வெங்கடேஷ், மதுரைசாதுராஜன் கலந்து கொண்டு தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி சிறப்புரை நிகழ்தினார்கள்.
அப்போது ஆத்தூர் வெங்கடேஷ் தமிழக அரசின் ஓராண்டில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் மகளிருக்கு இலவச பேருந்து பயணம், கொரோனா நிவரணம், படிக்கும் ஏழை பெண்களுக்கு உதவிதொகை உள்ளிட்ட நிறைவேற்றப்பட்ட திட்டங்களான குறித்து சிறப்புரையாற்றினார் தொடர்ந்து பேசுகையில் ஒரே மேடையில் திராவிட மாடலில் என்னுடன் தேசிய மாடல், குஜராத் மாடல் குறித்து விவாவதம் செய்ய தயாரா என பாஜகவின் குருமூர்த்திக்கு எச்சரிக்கை விடுத்து கேள்வி எழுப்பினார்.
மேலும் இந்தியாவிலே பொதுமக்களிடம் ஆட்சியின் குறை நிறைகள் குறித்து கேட்கும் ஒரே முதல்வர் தமிழக முதல்வர் தான் தமிழக முதல்வர் பொதுமக்களிடையே குறை நிறைகள் குறித்து பேருந்தில் பயணம் செய்து கேட்ட முதல்வரை பேருந்தில் பயணசீட்டு எடுத்தாரா என கேள்வி கேட்ட அண்ணாமலைக்கு பேருந்தில் முன் இருக்கையில் சட்டமன்ற உறுப்பினர் இலவசமாக பயணம் செய்யலாம் என்பது கூட தெரியாத அண்ணாமலை எப்படி படிச்சு ஐபிஎஸ் ஆனாரோ தெரியவில்லை சாதரண மக்களுக்கு தெரிந்த்து கூட தெரியாத அண்ணாமலைக்கு பாஜகவின் தலைவர் பதவி எப்படி வழங்கினார்களோ கொடுமையாப்பா என்றார்.
இதனையடுத்து பேசிய மதுரை சாதுராஜன் பல குரலில் பேசி அசத்தி தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கினார் அப்போது கடந்த ஆட்சி காலத்தில் விஐபிகளின் பாதுகாப்பு பணிகளுக்கு செல்லும் பெண்காவலர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலையறிந்து பெண் காவலர்கள் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை காவல் நிலைய பணியை மட்டும் செய்தால் போதும் என கூறியது பெண் காவலர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று முதல்வரை பாராட்டுகின்றனர் என்றும் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் மகளிருக்கு 1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் அறிவிப்பார் என சிறப்புரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒ.சுப்பிரமணியம், கீதாநடராஜன், ஒன்றிய செயலாளர்கள் சிறுவலூர்முருகன், நம்பியூர் மெடிக்கல் செந்தில்குமார், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் என 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.