BREAKING NEWS

இந்தியா உட்பட 16 நாடுகளுக்கு பயணத் தடை!!

இந்தியா உட்பட 16 நாடுகளுக்கு பயணத் தடை!!

விமானம்

கொரோனா பரவல் காரணமாக சவுதி மக்கள் இந்தியா, பெலாரஸ், ஆப்கன், இந்தோனேசியா உட்பட 16 நாடுகளுக்கு செல்ல தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா உலகம் முழுவதும் பரவி மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கியது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து. அதன்பின் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது.

இந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கியதைத் தொடர்ந்து, கடந்த சில வாரங்களாக தினசரி கொரோனா எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, சவுதி அரேபியா தனது குடிமக்களை இந்தியா உட்பட மொத்தம் 16 நாடுகளுக்குச் செல்ல தடை விதித்துள்ளது.

அதன்படி, இந்தியா, லெபனான், சிரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், ஏமன், சோமாலியா, எத்தியோப்பியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, லிபியா, இந்தோனேசியா, வியட்நாம், ஆர்மேனியா, பெலாரஸ் மற்றும் வெனிசுலா ஆகிய 16 நாடுகளுக்கு சவுதி அரேபியாவின் குடிமக்கள் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சவுதி அரேபியாவில் இதுவரை குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படவில்லை என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் பொதுமக்களுக்கு உறுதி அளித்துள்ளது.இதற்கிடையில், உலக சுகாதார அமைப்பு 12 நாடுகளில் 92 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதிப்படுத்தியுள்ளது என அறிவித்துள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

 

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )