BREAKING NEWS

இந்தியா – பாகிஸ்தான் போரில் உயிரிழந்த ராணுவ வீரர் செபாஸ்டியனுக்கு சிலை. கப்பல் படையின் திருச்சி கேப்டன் ரமேஷ் திறந்து வைத்தார்.

இந்தியா – பாகிஸ்தான் போரில் உயிரிழந்த ராணுவ வீரர் செபாஸ்டியனுக்கு சிலை. கப்பல் படையின் திருச்சி கேப்டன் ரமேஷ் திறந்து வைத்தார்.

லால்குடி அருகே மகிழம்பாடியில் முன்னாள் ராணுவ வீரர் குடியிருப்பு பகுதியில் இந்தியா பாகிஸ்தான் போரில் உயிரிழந்த கப்பல் படை மாலுமி செபாஸ்டியனுக்கு சிலை.
கப்பல் படையின் திருச்சி ஸ்டேசன் கமாண்டர் ரமேஷ் திறந்து வைத்தார்.

 

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த புதூர் உத்தமனூர் கிராமத்தைச் சேர்ந்த செபாஸ்டின் இந்திய கப்பல் படையில் மாலுமியாக பணிபுரிந்து வந்தார் இந்த நிலையில் 1971 இல் இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த போரில் கராச்சியில் துறைமுகத்தில் கப்பல் படை ஐஎன்எஸ் குக்கரில் பணிபுரிந்த போது போர்க்களத்தில் 9.12.1971 வீர மரணம் அடைந்தார்.

 

அவருடைய 51 ஆம் ஆண்டு நினைவாக அவருடைய சொந்த கிராமம் அருகே உள்ள மகிழம்பாடியில் முன்னாள் ராணுவ வீரர் குடியிருப்பு வளாகப் பகுதியில் வீர சக்கரா மதலை முத்து நினைவிடத்தில் செபாஸ்டின் சிலை திறப்பு விழா நடைபெற்றது.

 

விழாவிற்கு இந்திய கப்பல் படையின் திருச்சி ஸ்டேஷன் கமாண்டர் கேப்டன் ரமேஷ் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி போரில் உயிர் தியாகம் செய்த செபாஸ்டின் திருஉருவச் சிலையை திறந்து வைத்தார்.

 

விழாவில் இந்திய கப்பற் படையின் ஓய்வூதிய அலுவலக அலுவலர் ஆண்டித்தேவர், கப்பற்படையின் குக்கரியின் முன்னாள் கமான்டர் சிவகுமார், மருத்துவ முகாம் தலைவர் டாக்டர் விவேகானந்தன், கப்பற்படையின் முன்னாள் ராணுவ அதிகாரி நாகராஜன், செங்குட்டுவன் , ஐ.என்.ஸ் குக்கரியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற கப்பற்படை அதிகாரி ஸ்ரீ கிருஷ்ணா நாகேஷ் பூரி, ஆகியோர் கலந்து கொண்டு புகழ் அஞ்சலி செலுத்தினர்.

 

சிலை திறப்பு விழாவில் போரில் உயிர் தியாகம் செய்த செபாஸ்டின் மனைவி கிரேஸ் செபாஸ்டின், மகன் அமுதன் மற்றும் குடும்பத்தினர், புதூர் உத்தமனூர் கிராமத்தை சேர்ந்த உறவினர்கள், மகிழம்பாடியை சேர்ந்த முன்னாள் ராணுவ குடியிருப்பு பகுதி மற்றும் வட்டார பகுதியில் உள்ள முன்னாள் ராணுவ விரர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS