இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டு விசிக நிர்வாகிகள் சனாதன சக்திகளை தனிமைபடுத்த உறுதிமொழி.

செங்கை ஷங்கர் செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் அரசு மருத்துவமனை எதிரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காஞ்சி மத்திய மாவட்ட செயலாளர் செங்கை இரா.தமிழரசன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல் திருமாவளவன் அவர்களின் ஆணைக்கிணங்க,
நவம்பர் 26 ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டு சனாதன சக்திகள் வெளியேற்றவும், ஜனநாயக சக்தியை வென்றெடுக்க சட்டம் எழுதிய சட்ட மாமேதை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக புரட்சியாளர் அம்பேத்கர் அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.
இந்நிழ்ச்சியில் மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்பு செல்வன், நகர செயலாளர் ரவீந்திரன்,
ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், மாவட்ட அமைப்பாளர் முருகன் ஆகியோர்
முன்னலை வகித்தனர்.
மேலும் வழக்கறிஞர் சங்க தலைவர் சொக்கலிங்கம், பெருமாள், ஜெயகுமார், நகர துணை செயலாளர்கள் வெங்கட், ஜனா, ஜகதீஷ், டேவிட், ராமதாஸ், சாமுவேல், கலைதாசன், முனியன், முகிலன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியாக ஈழத் தமிழர்களின் போராளியாக வாழ்ந்த மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.