BREAKING NEWS

இந்திய உணவு கழக அதிகாரிகளின் அறிக்கை தவறானது. 21% ஈரமான நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வாங்கி சேமித்து வைப்பதால்தான் நெல்லில் உள்ள அரிசியின் நிறம் மாறி விடுகிறது. என அரவை ஆலை நிர்வாகிகள் விளக்கம்.

இந்திய உணவு கழக அதிகாரிகளின் அறிக்கை தவறானது. 21% ஈரமான நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வாங்கி சேமித்து வைப்பதால்தான் நெல்லில் உள்ள அரிசியின் நிறம் மாறி விடுகிறது. என அரவை ஆலை நிர்வாகிகள் விளக்கம்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் 92 டன் அரிசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உகந்தது அல்ல என்றும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் இந்திய உணவு கழகம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஷ்வரி கும்பகோணத்தை சேர்ந்த இரண்டு அரவை ஆலைகள் மற்றும் குடோன் அதிகாராக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இந்நிலையில் இப்பிரச்சனை தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட அரிசி அரவை ஆலைகளின் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அதன் செயலாளர் சதீஷ் கூறுகையில், அரவை ஆலைகளில் இந்திய உணவுக் கழக அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை. அவர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் மட்டும் தான் ஆய்வு செய்தார்கள். கீழே விழுந்த அரிசியை ஏதும் எடுத்து சேமித்தார்களா என்று தெரியவில்லை, ஆனால் அரிசியை நாங்கள் தரமாக தான் வழங்கி இருந்தோம். இந்திய உணவு கழகம் 0.2 அளவிற்கு பாதிப்பு இருப்பதாக தெரிவித்திருந்தார்கள், அதையும் நாங்கள் சரி செய்து தருவதாகவே தெரிவித்திருந்தோம்.

மத்திய அரசு உத்தரவுப்படி 21% வரை ஈரமான நிலை வாங்கலாம் என்று ஆணை உள்ளது. 21% ஈரமான நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வாங்கி சேமித்து வைப்பதால்தான் நெல்லில் உள்ள அரிசியின் நிறம் மாறி விடுவதாகவும், இதனால் அரிசியின் நிறம் சற்று மஞ்சளாக மங்கிவிடும் என தெரிவித்தார். மேலும் அரிசியில் கருப்பு வரும், அதை நீக்குவதற்கு தமிழக அரசு மானியமும் எங்களுக்கு வழங்குகிறது. எனவே கருப்பையும் நீக்கி தருகிறோம். எவ்வளவு முறை பொலிவு (பாலீஷ்) ஏற்றினாலும் பழுப்பு நிறத்தை நீக்க முடியாது. 21% ஈர பதத்தினால் நெல்லை வாங்குவதால் அந்த பழுப்பு நிறத்தை மாற்ற முடியாது என தெரிவித்த அவர், மனித பயன்பாட்டிற்கு தகுதியானது என்றெல்லாம் சொல்ல முடியாது.

அதை அனைவரும் சாப்பிடலாம். இதை மனித பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது என இந்திய உணவு கழகம் கூறி இருப்பது தவறானது. நல்ல அரிசி தான், நிறம் மட்டுமே மங்கி விடும். ஆனால் அரிசி தரமாகத்தான் இருக்கும் என அவர்கள் தெரிவித்தார்கள். இந்திய உணவு கழக அதிகாரிகளின் அறிக்கை தவறானது. அவர்கள் எப்படி இந்த அறிக்கையை கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. எந்த கட்டுப்பாடு முறைப்படி அரிசி வழங்க வேண்டும் என்று அவர்கள் கூறியிருக்கிறார்களோ, அதன்படி 0.2%மட்டுமே பாதிப்பு இருப்பதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள். அதையும் நாங்கள் சரி செய்து தருவதாகவே கூறி இருக்கிறோம். அரவையின் போது இயந்திர காரணங்களால் இதுபோன்ற தவறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

பேட்டி சதீஸ் செயலாளர். தஞ்சாவூர் அரிசி அரவை ஆலைகள் சங்கம்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )