இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கை கண்டித்தும் செங்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில் துக்காப்பேட்டை சகாய மாதா பள்ளிக்கு செல்லும் தெருவுக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவரை அகற்றக் கூறியும்துக்காப்பேட்டை பொதுமக்கள் நீர் ஆதாரமாக விளங்கிவரும் குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு அகற்றவும் வடிகால் கால்வாய்களை மற்றும் கல்வெட்டு அமைக்க வேண்டும் எனவும் கூறி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மருத்துவத்துறையினர் தனியார் மருந்து கடைகளில் ஆய்வு மேற்கொள்ளாமல் இருப்பதால் கருத்தடை மாத்திரைகள் அதிக அளவில் விற்பனை செய்து கடந்த சில தினங்களுக்கு முன் சங்கம் பகுதியில் ஒரு கர்ப்பிணி பெண் இறந்துள்ளதாகவும்,
முறையாக மருத்துவத்துறையினர் தனியார் மருத்துவங்களில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.