BREAKING NEWS

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி,

தமிழக அரசு கொண்டுவந்துள்ள அரசாணை எண் 115 -ஐ திரும்பப் பெற வலியுறுத்தி திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

தமிழக அரசு கொண்டுவந்துள்ள அரசாணை எண் 115 -ஐ திரும்பப் பெற வேண்டும்.
அரசுப் பணிக்கு தனியார் ஆள்சேர்ப்பு நிறுவனங்களை பயன்படுத்த முடிவினை கைவிட கோரியும், தனியார் நிறுவனங்கள் மூலம் ஆட்களை பணியமர்த்துவதால் 69% இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பரூக்கி தலைமையில் குழு அமைத்திருப்பது இளைஞர்களின் அரசு வேலை சிதைந்து விடும் எனவும்,

 

அரசாணை எண் 115 மற்றும் மாநகராட்சி, நகராட்சி கடைநிலை ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தான் இனி பணி நியமனம் என்ற அரசாணை 152 ஆகியவை திரும்ப பெற்றிடக்கோரி மாநிலம் முழுவதும் போராட்டம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் திருச்சி மாநகர் மாவட்ட குழு திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையற்றார் இயக்கத்தின் நோக்கங்களை விளக்கி மாவட்ட தலைவர் பா.லெனின் மற்றும் மாவட்ட செயலாளர் சேதுபதி ஆகியோர் உரையாற்றினர்.

 

 

இயக்கத்தை வாழ்த்தி 35 வது வார்டு மாமன்ற உறுப்பினர் தோழர் சுரேஷ் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக மாவட்ட துணை செயலாளர் சந்துரு நன்றி கூறினார். இயக்கத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஷாஜகான், யுவராஜ், கோபி, சூர்யா, ஜெய்லானி ஆகியோர் பங்கேற்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )