இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் முறைகேட்டை கண்டித்து குடியாத்தத்தில் காங்கிரஸார் சாலைமறியல் போராட்டம்!

இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் முறைகேடு மற்றும் வாக்கு திருட்டை கண்டித்து பாராளுமன்ற வளாகத்திலிருந்து இந்திய தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி ஊர்வலம் செல்ல முயன்ற இந்திய பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் இந்திய கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களின் கைதை கண்டித்து வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (ம) சார்பில் இன்று (11.08.2025) திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியளவில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.சுரேஷ்குமார் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.
நிகழ்வில் வேலூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் கிருஷ்ணவேணி ஜலந்தர், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் வீராங்கன், சங்கர், செல்வகுமார் பேரணாம்பட்டு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் முஜம்மில் அஹமத், மாவட்ட பொருளாளர் விஜயேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் சரவணன் பாரத். நவீன்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜய் பாபு, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்ரம்,
மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் கோமதி குமரேசன், மாவட்ட எஸ்ஸி பிரிவு தலைவர் அன்பரசன், மாவட்ட ஓபிசி பிரிவு தலைவர் ராகேஷ், மாநில எஸ்ஸி பிரிவு பொதுச்செயலாளர் சுரேஷ், மாநில ஓபிசி பிரிவு பொதுச்செயலாளர் சுனில், மாநில எஸ்ஸி பிரிவு செயலாளர் சுப்பிரமணி, குடியாத்தம் நகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகி இலியாஸ் பாஷா,
பள்ளிகொண்டா இளைஞர் காங்கிரஸ் தலைவர் சிக்கந்தர், கே.வி .குப்பம் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹேமந்த் குமார் மற்றும் நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, ஸ்டாலின், மன்சூர், ஜுபேர், நாகேஸ்வரன், சரத்சந்தர், ஜலந்தர், ரஜினிகாந்த், அருணாச்சலம், முகேஷ், பிரபு, வெங்கடேசன், சதீஷ், சதீஷ், பார்த்திபன், கார்த்தி, சதீஷ், உமாபதி, சேட்டு, அம்மனாகுப்பம் பாபு, கதிர்வேல், சிகாமணி, பழனிவேல், ரபீக் முஸ்தாக், அன்சர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் காவல்துறையினர் 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸார்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலை வேளையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.