இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலா முதுநிலை ஆராய்ச்சி துறையின் சார்பில் கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் உலக சுற்றுலா தினம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

உலக சுற்றுலா தினம் நிகழ்ச்சி:-
நிகழ்ச்சிக்கு அரசினர் ஆடவர் கல்லூரி முதல்வர்(பொறுப்பு) மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கினார்.
தேர்வு கட்டுப்பாடு அதிகாரி ராமசுப்பிரமணியன், கணிதத்துறை இணை பேராசிரியர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
அனைவரையும் கல்லூரியின்
துறை தலைவர் முனைவர் தங்கராஜ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சுற்றுலா நிறுவன கிரேட் விங்ஸ் இயக்குனர் ஜாகிர் உசேன், புதுக்கோட்டை அரசினர் பெண்கள் கல்லூரியின் சுற்றுலாத்துறை இணை பேராசிரியர் நரசிம்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் சுற்றுலா நிறுவன கிரேட் விங்ஸ் இயக்குனர் ஜாகிர் உசேன் பேசியதாவது:-
ஆண்டுதோறும் உலக சுற்றுலா தினம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சுற்றுலா
மறு பரிசீலனை என்பதாகும். அதாவது மாற்றி சிந்திக்க வேண்டும் என்பதே.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவினால் மிகவும் பாதிப்படைந்து. மீண்டும் வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை உலகில் எடுத்துள்ளது.
உலக பொருளாதார வளர்ச்சியில் வேகமாக வளரக்கூடிய துறை சுற்றுலா சுற்றுலா விளங்குகிறது.
சுற்றுலாதுறை நிலையான வருமானத்தை தரக்கூடியது, சிறிய நாடான மாலத்தீவு
32 சதவீதம்
பொருளாதார வளர்ச்சி சுற்றுலா சார்ந்தே உள்ளது.
உலக மக்கள் ஒருமைப்பாடு, ஒற்றுமை வளர்ப்பது சுற்றுலாவே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றன் வார்த்தையே சுற்றுலாவின் தாரக மந்திரம்.
ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு சுற்றுலாவால் பரவுகிறது,மக்களின் மனதில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் ஏற்படுகிறது.
மனித உறவுகள் பலப்படுத்துவதும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் சுற்றுலா செல்லும் போது அன்பும் பரஸ்பரமும், புரிந்துணர்வும் வளர்கிறது.
உலகில் தலைசிறந்த சுற்றுலா தளங்களில் பாலைவனம், மலைகள், பனிக்கட்டிகள் நிறைந்த குளிர் பிரதேசங்கள், நீர்வீழ்ச்சிகள், அடர்ந்த காடுகள், அழகிய விலங்குகளின் வசிப்பிடங்கள் என நமது நாட்டில் அனைத்தும் சிறப்பாக அடங்கியுள்ளது.
இன்றைய சுற்றுலா என்பது எல்லோருக்கும் எப்போதும் கிடைக்கும் வகையில் எளிமையாகவும் எளிதில் அனுபவிக்க கூடிய விதமாக உள்ளது. மக்களின் பொருளாதார வசதிக்கேற்ப சுற்றுலா தளங்களை தேர்ந்தெடுத்து சுற்றுலா செல்லலாம் சுற்றுலா நிறுவனங்கள்,
இன்று சிறப்புடன் செயல்பட்டு வருகின்றன, மக்கள் அதனை அணுகி தங்கள் தேவைக்கு ஏற்ப உள்நாடு, வெளிநாடு சுற்றுலாவை அமைத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் முதுநிலை சுற்றுலா ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள், துறை தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் இணை பேராசிரியர் லதா நன்றி கூறினார்.