BREAKING NEWS

இந்தி திணிப்புக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!

இந்தி திணிப்புக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!

 

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

 

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, இந்தி திணிப்பு திட்டங்களைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று கல்வி வளாகங்களில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என இந்திய மாணவர் சங்கம் அறிவித்திருந்தது.

 

 

இதையொட்டி தூத்துக்குடி வஉசி கல்லூரியில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் கார்த்திக் தலைமையில் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

இதில் மாணவர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )