BREAKING NEWS

இனி பணம் எடுக்க, டெபாசிட் செய்ய.. ஆதார், பான் கார்டு கட்டாயம்!!

இனி பணம் எடுக்க, டெபாசிட் செய்ய.. ஆதார், பான் கார்டு கட்டாயம்!!

வங்கிக் கணக்கில் பணம் எடுத்தல் மற்றும் பணம் போடுவதில், புதிய விதிமுறைகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

இதன்படி, இனி ஒரு நிதியாண்டில் வங்கிக் கணக்கில் ரூபாய் 20 லட்சத்திற்கு மேல் பணம் எடுத்தாலும், பணம் போட்டாலும், பான் அல்லது ஆதார் கார்டு கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வருகிற 26-ம் தேதி முதல் இந்த நடவடிக்கையினை அமல்படுத்தவுள்ளது.

 

வங்கிகள், கூட்டுறவு வங்கி அல்லது தபால் நிலையங்களில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளில், ஒரு நிதியாண்டில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தாலோ அல்லது எடுத்தாலோ அதற்கு பான் அல்லது ஆதார் கார்டு அவசியம் என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தபால் அலுவலகங்கள் ஆகியவற்றில் நடப்பு கணக்கு (Current Account) தொடங்கவோ, ரொக்க கடன் கணக்கு (Cash credit account) தொடங்கவோ பான் கார்டு அல்லது ஆதார் கார்டு கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒரு நிதியாண்டில், ஒருவர் மொத்தம் எவ்வளவு பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளார். அதற்கு வரிப்பிடித்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை வரி துறையினர் எளிதாக அறிந்துகொள்ள முடிவும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )