BREAKING NEWS

இன்று உலக முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் , மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இன்று உலக முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் , மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று உலக முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் , மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

முதியோருக்கு எதிராக இழைக்கப்படும் அனைத்துவகை கொடுமைகளையும் வாய்மொழியாகவோ, வன்முறை மூலமாகவோ, பொருளாதார ரீதியாகவோ எந்த உருவில் வந்தாலும் அதை களைவதற்காக முளையிலேயே கண்டுபிடித்து தலையிட்டு தடுக்க பாடுபடுவேன்.

மேலும் அன்பு மற்றும் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய அங்கீகாரம் இடையூறு ஏற்பட்டால் அவற்றை தடுத்து பாதுகாப்பேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தலைமை ஆசிரியர் சாவித்திரி, ஆசிரியர் கண்ணபிரான், இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்கள் ஶ்ரீநதி,கோகுலப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )