இன்று முதல் சோதனை முறையில் டிஜிட்டல் நாணயம் அறிமுகம்.
உலக சந்தையில் கிரிப்டோ கரன்சி பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில் இதில் முதலீடு செய்ய இளம் தலைமுறையினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.எதனால் பொய் கரன்சிகள், பணம் பதுக்கல், கருப்பு பணத்தை வெள்ளையாக்குதல் போன்றவை உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக உள்ளன.
இவற்றைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி கோரிக்கையின் பேரில் இந்தியாவில் கடந்த பட்ஜெட்டில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரைவில் டிஜிட்டல் நாணயம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்தார். இதை அறிமுகப்படுத்தும் பணி தற்போது நடைமுறைக்குகொண்டு வந்துள்ளது.இதை ரிசர்வ் வங்கி ஆளுநர் ரபி சங்கர் அளித்துள்ள பேட்டியில் மொத்த பரிவர்த்தனைக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்.அரசு பத்திரங்கள் டிஜிட்டல் நாணயங்கள் கொடுத்துவாங்க முடியும்.
டிஜிட்டல் நாணயம் வர்த்தகர்கள் வாடிக்கையாளர்கள் உள்ளடக்கிய குறிப்பிட்ட பகுதிகளில் ஒரு மாதத்திற்கு பிறகு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.தற்போது பயன்பாட்டில் உள்ள பணத்திற்கு டிஜிட்டல் நாணயம் கூடுதல் தேர்வாக. டிஜிட்டல் நாணயம் பண பரிமாறுவதற்கு எளிதாகவும் வேகமாகவும் பயன்படும்.தற்போது ரிசர்வ் வங்கியில் கரன்சி வைத்திருப்பதைப் போல இந்த டிஜிட்டல் நாணயங்களையும் இருபில் வைத்துக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிக்கையில். கூறப்பட்டுள்ளது.