BREAKING NEWS

இன்று முதல் பணப்பரிவர்த்தனைக்கு இது கட்டாயம்!!

இன்று முதல் பணப்பரிவர்த்தனைக்கு இது கட்டாயம்!!

வங்கிகளில் இனி வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவோ அல்லது டெபாசிட் செய்யும் போதோ கண்டிப்பாக தங்களது ஆதார் மற்றும் பான் கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.தபால் நிலையங்கள், கூட்டுறவு வங்கிகளில் புதிதாக கணக்கு தொடங்கும் போது வாடிக்கையாளர்கள் தங்கள் பான் மற்றும் ஆதார் எண்களை இணைக்க வேண்டும். மேலும் ஒரு நிதியாண்டில் ரூ.20 லட்சத்துக்கும் மேல் பணப்பரிவர்த்தனை செய்யும் போதும் பான் மற்றும் ஆதார் எண்களை குறிப்பிட வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணம் ரூபாய் சம்பளம்

வருமான வரி முதன்மை இயக்குனர் ஜெனரல் (அமைப்புகள்) அல்லது முதன்மை இயக்குனரால் அங்கீகரிக்கப்பட்ட நபரிடம் மட்டுமே நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு) அல்லது ஆதார் எண் மற்றும் மக்கள் தொகை தகவல் அல்லது தனி நபரின் பயோமெட்ரிக் தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று வங்கி வாடிக்கையாளர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பணம்

நிதி மோசடிகளை குறைக்கும் நோக்கத்திலும், அதிக மதிப்புள்ள பணப்பரிவர்த்தனையை வருமான வரித்துறை கண்காணிக்க ஏதுவாக இருக்கும் வகையில் வங்கி வாடிக்கையாளர்கள் பணப்பரிவர்த்தனையின் போது இத்தகைய விதிகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போது அனைவரும் பான் மற்றும் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வும், பான் கார்டு இல்லாதவர்களின் விவரங்களை பதிவு செய்யவும் வங்கிகளுக்கு உதவியாக இருக்கும்.

வாடிக்கையாளர்கள் சிலர் அதிகளவில் பணத்தை டெபாசிட் மற்றும் எடுக்கும் வேளைகளில் தங்களிடம் பான்கார்டு இல்லை என்று கூறி தப்பித்து வருகின்றனர். இனி அதுபோன்று தப்பிக்க முடியாது என்றும் அத்தகைய ஓட்டைகளை அடைத்து வரித்துறைக்கு உதவக்கூடும். வருமானவரி செலுத்தாததவர்கள் விஷயத்தில் இந்த நடவடிக்கை நல்ல பலனை கொடுக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )