BREAKING NEWS

இன்று வளர்பிறை அஷ்டமி.

இன்று வளர்பிறை அஷ்டமி.

மறக்காமல், அஷ்டமியில் பைரவரை வழிபட் டால், நம்முடைய கஷ்டத்தையெ ல்லாம் இனி மறந்துவிடலாம். அனைத் தையும் நீக்கி அருள் புரிவார் பைரவர். இன்று அஷ்டமி.

வளர்பிறை அஷ்டமி பைரவருக்கு விசே ஷம். இன்று வளர் பிறை அஷ்டமியில் பைரவ தரிசனம் செய்யுங்கள்.

கர்மம் போக்க நாய்களுக்கு உணவிடு வோ ம் வளர்பிறை அஷ்டமியில் இவ்வாறு செய்து வந்தால் பைரவர் அருள் நிச்சயம் கிடைக்கும்.

சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவ ரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார். எனவே, நாம் சனிக்கிழமைக ளில் பைரவரை வணங்கினால் சனி பக வானால் உண்டாகும் இன்னல்கள் யாவும் நீங்கும்.

பைரவ பூஜை:
******
தேய்பிறை அஷ்டமி திதியில் கால பைரவ ரின் பூஜை மகத்துவம் பெற்றுள்ளது போல் வளர் பிறை அஷ்டமி திதியிலும் பைரவ பூஜை மகத்துவம் நிறைந்தது. வளர் பிறை அஷ்டமி திதியில் நிறைவே ற்றும் பைரவ பூஜை நமது சஞ்சித கர்மங் களை களையும் தன்மை கொண்டது.

ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமி திதி அன் றும் பைரவ பூஜையை நிறைவேற்றும் போது பக்தர்கள் ஷீரடி சாய்பாபாவிற்கும் அவருடன் வரும் அடியார்களுக்கும், நாய் களுக்கும் விருந்தளிப்பது வழக்கம். அவ் விருந்தில் நாய்களுக்கும் மனிதர்களைப் போல இலை போடப்பட்டு பதார்த்தங்கள் படைக்கப்படும்.

கால பைரவ மூர்த்தி நாயை வாகனமாகப் பெற்று உள்ளார். நாய்கள் நன்றி மறவாத பிராணிகள் என்பதோடு மட்டும் அல்லாம ல் விதியை முன் கூட்டி உரைக்கும் வல்ல மையும் ஈசன் அருளால் படைத்துள்ளன.

நமக்கு வரக் கூடிய ஆபத்துக்களையும் பிரச்னைகளையும் மூன்கூட்டியே அறிந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வழிகாட்டு வதே கால பைரவர் வழிபாடாகும்.

சிவபெருமான் நான்கு நாய்களுடன் காசி த்தல கங்கைக் கரையில் ஆதிசங்கரருக்கு காட்சி தந்தார். சமீப காலத்தில் பைரவ வழிபாட்டை முறையாக நிறைவேற்றி மக்களுக்கு நல்வா ழ்வு அளித்த மகானே பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் ஆவார்கள்.

சித்தமரபில் வந்த இப்பெருமான் நாய்க ளுக்கும் மற்ற உயிரின ங்களுக்கும் இடை யே எந்த வேறு பாட்டையும் காணாதவர். நாம் மனிதர்களுக்கு உணவிடு வதை போலவே இவர் நாய்களுக்கு முழு வாழை இலையைப் போட்டு சாதம், சாம்பார், ஸ்வீட், அப்பளம், பாயசம் என அனைத்து உணவுவகைகளையும் அன்புடன் பரிமாறி அனைத்து நாய்களையும் அழைப்பார்

அவருடைய வழிபாட்டில் நிகழ்ந்த அதிசய ம் என்னவென்றால் இவர் உணவு பரிமா றும் வரை எந்த நாயும் அன்னதானம் நிகழும் இடத்தில் தென்படாது. வாழை இலையில் உணவு பரிமாறி முடிந்தவுடன் இவர் கால பைரவரை பிரார்த்தித்த பின் ஒவ்வொரு நாயாக வந்து மனிதர்களைப் போலவே இலை யின் முன் அமர்ந்து கொள்ளும்.

ஒவ்வொரு முறையும் குறைந்தது 300 நாய்களுக்கு குறை யாமல் அன்னதானம் அளிப்பது வழக்கம். இவ்வாறு அனைத்து இலைகள் முன்பும் நாய்கள் அமர்ந்த பின் பாடகச்சேரிசுவாமிகள் அன்புடன் உணவை ஏற்குமாறு அந்த நாய்க ளை வேண்டுவார்.

அதன் பின்னரே இவர் அழைத்த பைரவ மூர்த்திகள் உணவை அமைதியாக ஏற்பர். அதன் பின்னர், வரும் போது வரிசையாக வந்த அதே பாணியில் வரிசையாக ஒவ் வொரு நாயாக வெளியே சென்று விடும். எங்கிருந்து அத்தனை நாய்கள் வந்தன, மீண்டும் அந்த நாய்கள் எங்கு சென்றன என்பது இன்று வரை எவருக்கும் புரியாத ஆன்மீக ரகசியம்.

மேலும் ஓரிடத்தில் இரண்டு நாய்கள் சேர் ந்தாலே அவை ஒன்றுக்கொன்று அடித்துக் கொண்டு அங்கு கூச்சலும் சண்டையும் வந்து விடும். ஆனால், பாடகச்சேரிராமலி ங்க சுவாமிகளின் பைரவ பூஜையில் குறைந்தது 300 நாய்கள் இருந்தாலும் ஒரு சிறு சப்தம் கூட எழாது என்பதே பேரதிசயமாகும்.

இவ்வாறு மகான் கள் பைரவ மூர்த்தியின் வாகனமான நாய்க ளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிப்பதிலிருந்து நாய்கள் மனித குலத்திற்கு எத்தகைய அற்புத பாடங்களை போதிக்க வல்லவை என்பது தெளிவாகின்றது அல்லவா?

இதை மக்களுக்கு மௌனமாக எடுத்துரை க்க வே பைரவ மூர்த்திகள் நாய் வாகனத் தில் எழுந்தருளி உள்ளனர் என்பது அவர் களுடைய பற்பல அவதார ரகசியங்களுள் ஒன்றாகும்.

பைரவ மூர்த்தங்கள் அஷ்ட பைரவ மூர்த்தி கள் என எட்டு வடிவங்களில் திகழ்கிறார்க ள் அல்லவா? சீர்காழி, திருக்குற்றாலம் சித்திர சபை, திருஅண்ணாமலை போன் ற திருத்த லங்களில் இத்தகைய அஷ்ட பைரவ மூர்த்தி களின் திருஉருவங்களை த் தரிசிக்கலாம். இதனை வளர்பிறை அஷ் டமியின் மகிமையை திருவண்ணாமலை அகத்தியர் நாடி மூலமாக சித்தர்கள் கூறி உள்ளனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )