BREAKING NEWS

இபிஎஸ் பக்கம் உள்ள நிர்வாகிகளை ஒருமையில் பேசிய ஓபிஎஸ் நிர்வாகி. ஓ.பி.எஸ். இடைமறித்து தவறாக மரியாதை குறைவாக பேச வேண்டாம் என அறிவுறுத்தல்.

இபிஎஸ் பக்கம் உள்ள நிர்வாகிகளை ஒருமையில் பேசிய ஓபிஎஸ் நிர்வாகி.  ஓ.பி.எஸ். இடைமறித்து தவறாக மரியாதை குறைவாக பேச வேண்டாம் என அறிவுறுத்தல்.

 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது ஆதரவாளர்களை சந்தித்தார்.

 

இதில் தேனி மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட தலைமைக்கழகம், மாவட்டம் பொதுக்குழு மற்றும் நகர் ஒன்றியம் பேரூர் சார்பு அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் தேனி மாவட்ட செயலாளர் சையது கான் தலைமையில் ஓ.பி.எஸ்-ஸை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.‌

 

புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் அனைவரும் பூங்கொத்து கொடுத்தும், மலர் மாலை, சால்வை அணிவித்த நிர்வாகிகள் சிலர் ஓ.பி.எஸ்-ன் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

கூட்டத்தின் இறுதியில் தேனி மாவட்ட அதிமுக துணை செயலாளர் முருகேசன் நன்றியுரையாற்றினார். அப்போது புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு ஓ.பி.எஸ் தலைமையில் ஆட்சி அமைக்க உழைத்திட வேண்டும் என்றார்.

 

மேலும் அதிமுக ஆரம்பமான காலத்தில் இருந்த நிர்வாகிகள் தற்போதும் நம்மிடம் தான் இருக்கிறார்கள். ஆனால் பணத்தால் அதிமுகவை விலை கொடுத்து வாங்கி ஒருவர் செயல்படுவதாகவும், அவருடன் பணத்திற்காக சிலர் இருப்பதாக ஒருமையில் பேசினார். அப்போது குறுக்கிட்ட ஓ.பி.எஸ், யாரையும் மரியாதை குறைவாக பேச வேண்டாம் என அறிவுறுத்தினார்.

 

CATEGORIES
TAGS