இரவு ரோந்துப் பணி போலீஸாருக்கு மாதம் ரூ.300 சிறப்பு அலவன்ஸ்: தமிழக அரசின் புதிய உத்தரவுக்கு வரவேற்பு..
சென்னை:
தமிழகத்தில் 1,305 சட்டம் – ஒழுங்கு காவல் நிலையங்கள், 47 ரயில்வே காவல் நிலையங்கள், 202 மகளிர் காவல் நிலையங்கள், 273 போக்குவரத்து, புலனாய்வு காவல் நிலையங்கள் மற்றும் 27 புறக்காவல் நிலையங்கள் செயல்படுகின்றன.
இவற்றின் மூலம் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் 23,542 பேர் மகளிர் காவலர்கள். இவர்களுக்கு தற்போது வரை சீருடைப் படி, நகர குடியிருப்பு படி, காவலர் முதல் ஏட்டுவரையிலும் இடிஆர் அலெவென்ஸ், கடந்த 6 மாதமாக பெட்ரோல் அலெவென்ஸ் (தினமும் ரூ.250), வெளியூர் சென்றால் டிராவல்ஸ் அலெவென்ஸ் மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவல் துறையினருக்கென சிறப்பு அலெவென்ஸ் கிடைக்குமா என எதிர்பார்த்த நிலையில்.., இரவு ரோந்து காவலர்களை ஊக்குவிக்கும் விதமாக மாதம் ரூ.300 வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.