இராமநாதபுரம் நான்கு வயது சிறுவன் யோகாசனப் போட்டியில் சக்ராசனம், தனுராசனம், உஷ்ட்ராசனம், உள்ளிட்ட ஆசனங்களை செய்து தங்க கோப்பை வென்று அசத்தினார்.

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள மேலச்செல்வனூர் கிராமத்தை சேர்ந்த எஸ்.எம்.எஸ் யோகா அகாடமியின் நான்கு வயது சிறுவன் ஸ்மித்ரன் சேதுபதி நேபாளத்தில் நடைபெற்ற 8 வயதிற்கு உட்பட்டோருக்கான யோகாசனப் போட்டியில் சக்ராசனம், தனுராசனம், உஷ்ட்ராசனம், உள்ளிட்ட ஆசனங்களை செய்து தங்க கோப்பை வென்று அசத்தினார்.
மேலும் தங்கப்பதக்கம் வென்று அசத்திய மாணவன் ஸ்மித்ரன் சேதுபதி மற்றும் பயிற்சியாளர் சுகன்யா ஆகியோருக்கு சொந்த ஊரில் கிராம பொதுமக்கள் இணைந்து பூமாலை மற்றும் பொன்னாடை அணிவித்து மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து பெண்கள் ஆரத்தி எடுத்தும் ஊர்வலமாக அழைத்துச் சென்று தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
CATEGORIES Uncategorized
