இருங்கலூர் தனியார் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இளைஞர் மீது ஆட்டோ மோதி விபத்தில் படுகாயம்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்கலூர் ஊராட்சியில் உள்ள தனியார் கல்லூரி பேருந்து நிறுத்த பகுதியில் நின்று கொண்டிருந்த இளைஞர் மீது அவ்வழியே வந்த ஆட்டோ மோதி விபத்தில் இளைஞர் படுகாயம் அடைந்தார்.
சமயபுரம் அருகே இனம் சமயபுரம் ரஹமத் காலனியை சேர்ந்தவர் 22 வயதான வீரமணி இவர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ள தனியார் கல்லூரி பேருந்து பகுதியில் நின்று கொண்டிருக்கிறார்.
அப்போது அவ்வழியே வந்த ஆட்டோ இளைஞர் மீது எதிர்பாராத விதமாக மோதியது இதில் அவர் படுகாயம் அடைந்தார் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த விபத்து குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
CATEGORIES திருச்சி